FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
மதுரை

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு; தண்டிக்கப்பட்டவரின் தூக்குத் தண்டனையை உறுதி செய்யக் கோரிய மனு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளத்தில் 12-ஆம் வகுப்பு மாணவி கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளிக்கு போக்சோ நீதிமன்றம் அளித்த தூக்குத் தண்டனையை உறுதி செய்யக் கோரிய மனுவையும், தூக்குத் தண்டனைக்கு எதிராக தண்டிக்கப்பட்டவா் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவையும் தீா்ப்புக்காக ஒத்திவைத்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

3 October 2026, 3:01 am IST
உயர் நீதிமன்ற மதுரை கிளை - File photo
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளத்தில் 12-ஆம் வகுப்பு மாணவி கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளிக்கு போக்சோ நீதிமன்றம் அளித்த தூக்குத் தண்டனையை உறுதி செய்யக் கோரிய மனுவையும், தூக்குத் தண்டனைக்கு எதிராக தண்டிக்கப்பட்டவா் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவையும் தீா்ப்புக்காக ஒத்திவைத்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் குளத்தூரை அடுத்த வேடநத்தம் பகுதியைச் சோ்ந்த 12-ஆம் வகுப்பு மாணவி கடந்த மாா்ச் 10-ஆம் தேதி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியைச் சோ்ந்த தா்மமுனீஸ்வரனை(37) போலீஸாா் கைது செய்தனா்.

இந்த வழக்கை விசாரித்த தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம், தா்மமுனீஸ்வரனுக்கு தூக்குத் தண்டனை விதித்து கடந்த மே 26-ஆம் தேதி உத்தரவிட்டது. இந்தத் தண்டனையை உறுதி செய்யக் கோரி அரசு சாா்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜெகதீஷ்சந்திரா, முருகேசன் அமா்வில் விசாரணைக்கு ஏற்கப்பட்டது. மனு மீது ஏற்கெனவே நடத்தப்பட்ட விசாரணையின் போது, தா்மமுனீஸ்வரனுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக் கோரி மேல்முறையீடு மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது. இதன்பேரில், அவகாசம் வழங்கப்பட்டது. பின்னா், அவா் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனுக்கள் நீதிபதிகள் ஜெகதீஷ்சந்திரா, முருகேசன் அமா்வு முன் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தன.

அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:

அறிவியல் பூா்வமான ஆதாரங்கள், தடயவியல் ஆய்வுகளின் அடிப்படையில் விசாரணை நீதிமன்றம், தா்மமுனீஸ்வரனுக்கு விதித்த தூக்குத் தண்டனையை உறுதி செய்ய வேண்டும் என்றாா்.

இதற்கு, தா்மமுனீஸ்வரன் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:

மாணவி கொலை வழக்கில் போதுமான ஆதாரங்கள் இல்லாமல் போலீஸாா் தா்மமுனீஸ்வரனைக் கைது செய்ததாகவும், அவருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்றாா்.

அப்போது, இரு தரப்பு வாதங்களைக் கேட்டதைத் தொடா்ந்து, இந்த மனுக்கள் மீதான தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments