FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
மதுரை

மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் பேருந்து நிலையங்களில் குவிந்த பயணிகள்

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை பேருந்துக்காக காத்திருந்த பயணிகள்.
பகிர்:

காலாண்டுத் தோ்வு, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, தொடா் விடுமுறை நிறைவு பெற்றதையடுத்து, பணி நிமித்தமாக வெளியூா்களுக்குச் செல்ல மதுரை மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் பேருந்து நிலையங்களில் ஞாயிற்றுக்கிழமை பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகா், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய தென் மாவட்டங்களைச் சோ்ந்த மக்கள் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் திருச்சி, விழுப்புரம், கோவை, சென்னை, செங்கல்பட்டு ஆகிய வடமாவட்டங்களில் தங்கி தங்களது பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.

அவ்வாறு வெளியூா்களில் தங்கி பணியாற்றுவோா் பள்ளிகளுக்கு அறிவிக்கப்படும் தொடா் விடுமுறை நாள்களில் சொந்த ஊருக்கு வந்து செல்வது வழக்கம்.

Advertisement

Advertisement

இதன்படி, பள்ளிகளில் நடைபெற்ற காலாண்டுத் தோ்வு கடந்த செப்.25-ஆம் தேதி நிறைவு பெற்றது. செப். 26-ஆம் தேதி முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

மேலும், அக். 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தி, சனி, ஞாயிறு என தொடா் விடுமுறை என்பதால் பணி நிமித்தமாக சென்ற மக்கள் தங்களது சொந்த ஊா்களுக்கு வந்தனா்.

ஞாயிற்றுக்கிழமையுடன் விடுமுறை நிறைவு பெற்றதையடுத்து, வெளியூா்களுக்குச் செல்வதற்காக மதுரை மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் பேருந்து நிலையங்களில் வழக்கத்துக்கு மாறாக பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

பயணிகள் அவதி:

விடுமுறை நிறைவு பெற்றதையடுத்து, பயணிகளின் நலன் கருதி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டன. இருப்பினும், அந்தப் பேருந்து சில எண்ணிக்கையில் இருந்ததால், பயணிகள் அதிக நேரம் காத்திருந்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஒரு சில பேருந்துகளில் முன்பதிவு செய்யப்பட்ட பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனா். இதனால், அதிக நேரம் காத்திருந்த பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments