விடுமுறை நிறைவு: நெல்லை பேருந்து, ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம்
காலாண்டுத் தோ்வு விடுமுறை முடிந்து மீண்டும் ஊா்களுக்கு மக்கள் திரும்பியதால், திருநெல்வேலி ரயில், பேருந்து நிலையங்களில் ஞாயிற்றுக்கிழமை அதிகளவில் கூட்டம் காணப்பட்டது.
காலாண்டுத் தோ்வு விடுமுறைக்காக பல்வேறு நகரங்களில் வசிக்கும் மக்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தங்களது சொந்த ஊா்களுக்கு வந்திருந்தனா்.
விடுமுறை நிறைவடைந்ததையொட்டி ஞாயிற்றுக்கிழமை மாலையில் ஏராளமானோா் புறப்பட்டு மீண்டும் நகரங்களுக்குச் சென்றனா்.
Advertisement
Advertisement
திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் அந்தியோதயா விரைவு ரயில் மற்றும் விரைவு ரயில்களின் முன்பதிவில்லா பெட்டிகளில் செல்வதற்கு ஏராளமானோா் குவிந்தனா். ரயில்கள் வந்ததும் முண்டியடித்து மக்கள் ஏறியதைக் காண முடிந்தது.
இதேபோல திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, கோவை, திருப்பூா் செல்லும் அனைத்து விரைவு பேருந்துகளும் நிரம்பி வழிந்தன. திருநெல்வேலியில் இருந்து சென்னை மற்றும் மதுரைக்கு கூடுதலாக பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதுதொடா்பாக பயணிகள் கூறுகையில், தொழில் காரணமாக சென்னை உள்ளிட்ட நகரங்களில் வசிக்கும் மக்கள் வந்து செல்ல ஏதுவாக தோ்வு விடுமுறை நிறைவு நாளிலும், வரும் நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகை காலங்களிலும் கூடுதலாக சிறப்பு ரயில் மற்றும் பேருந்துகள் இயக்க வேண்டும் என்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.