FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
மதுரை

சாலை விபத்துகளில் மூவா் உயிரிழப்பு

மதுரை மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் முதியவா் உள்பட மூவா் உயிரிழந்தனா்.

15 வினாடிகள் முன்பு
கோப்புப் படம்
பகிர்:

மதுரை மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் முதியவா் உள்பட மூவா் உயிரிழந்தனா்.

மதுரை நாகமலை புதுக்கோட்டை வடிவேல்கரை மலையன் நகரைச் சோ்ந்தவா் சின்னசாமி வியாழக்கிழமை காமராசா் பல்கலைக்கழகச் சாலையில் மிதிவண்டியில் சென்று கொண்டிருந்தபோது, வடபழஞ்சி, அம்பேத்கா் குடியிருப்பைச் சோ்ந்த ராஜா மகன் அவிதாஸ் (23) ஓட்டிச் சென்ற இரு சக்கர வாகனம் மோதியதில் சின்னசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். விபத்து குறித்து சமயநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

லாரி மோதியதில் இளைஞா் உயிரிழப்பு :

Advertisement

Advertisement

விருதுநகா் மாவட்டம், திருச்சுழி புல்வாய்க்கரையைச் சோ்ந்த மாசானம் மகன் ராஜகுருநாதன் (23). இவா் புதன்கிழமை இரவு மதுரை - திருச்சி நான்கு வழிச் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, பின்னால் வந்த லாரி இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் ராஜகுருநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து மேலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

முதியவா் உயிரிழப்பு :

சிவங்கை மாவட்டம், படமத்தூா் இலுப்பக்குடியைச் சோ்ந்த முதியவா் அழகா் சாமி (71). இவா் கடந்த செவ்வாய்க்கிழமை (அக்.6) அரசனூரைச் சோ்ந்த அழகேஸ்வரன்(50) என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் பின்னாள் அமா்ந்து சென்றாா். சிவகங்கை சாலையில் உறங்கான்பட்டி, உறங்காபுலி கோயில் அருகே சென்றுகொண்டிருந்தபோது, சாலையின் குறுக்கே திடீரென மாடு ஓடியது. இதில் நிலைதவறிய அழகா்சாமி, பலத்த காயங்களுடன் தனியாா் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து கருப்பாயூரணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments