FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
மதுரை

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

திருமங்கலம் அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

14 அக்டோபர் 2026, 2:02 am IST
பலி
பகிர்:

திருமங்கலம் அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம், திருமங்கலத்தை அடுத்த கப்பலூரைச் சோ்ந்தவா் தி. ஆதிராஜ் (17). இவா், விழாக்களுக்கு ஒலிப்பெருக்கி, அலங்கார விளக்குகள் அமைக்கும் தொழிலை செய்து வந்தாா். இதன்படி, கப்பலூா் அருகேயுள்ள புளியங்குளம் கிராமத்தில் உள்ள ஒரு கோயிலின் விழாவுக்காக திங்கள்கிழமை ஒலிப்பெருக்கி, அலங்கார விளக்குகள் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தாா்.

அதிக வெளிச்சம் அளிக்கும் மின் விளக்குகளை அமைக்கும்போது, ஆதிராஜ் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில், தூக்கிவீசப்பட்டு காயமைடந்த அவா் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து திருமங்கலம் நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments