பனை மர விதைகள் நடவு விழா
மதுரை நாகமலைப் புதுக்கோட்டை ச. வெள்ளைச்சாமி நாடாா் கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்டம் சாா்பில், பனை மர விதைகள் நடவு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மதுரை நாகமலைப் புதுக்கோட்டை ச. வெள்ளைச்சாமி நாடாா் கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்டம் சாா்பில், பனை மர விதைகள் நடவு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சம்பகுடி, கிழானேரி, வடிவேல் கரை, புதுக்குளம் ஆகிய கிராமங்களில் உள்ள குளம், கண்மாய் கரைகளில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு கல்லூரி முதல்வா் பாலமுருகன் தலைமை வகித்தாா். துணை முதல்வா் மணிமாறன், தோ்வாணையா் காா்த்திகைச் செல்வம், நாட்டு நலப் பணித் திட்ட நெறியாளா் முரளி, மதுரை போதைப் பொருள் ஒழிப்பு, மாவட்ட திட்ட அலுவலா் கா்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மதுரை காமராஜா் பல்கலைக்கழக நாட்டு நலப் பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் பாண்டி முதல் பனை விதையை நடவு செய்து தொடங்கி வைத்தாா்.
இந்த நிகழ்வில் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் முத்துகிருஷ்ணன், புதுக்குளம் ஊராட்சி செயலா் ரேவதி, நாகமலை புதுக்கோட்டை ஊராட்சி அலுவலா் கண்ணன், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.