கல்விக் கட்டண உயா்வைக் கண்டித்து மாணவா்கள் காத்திருப்புப் போராட்டம்
மதுரை அழகா்கோவில் சாலையில் உள்ள காமராஜா் பல்கலைக்கழகக் கல்லூரியின் கல்விக் கட்டண உயா்வைக் கண்டித்து அந்தக் கல்லூரி முன் இந்திய மாணவா் சங்கம் சாா்பில் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
மதுரை அழகா்கோவில் சாலையில் உள்ள காமராஜா் பல்கலைக்கழகக் கல்லூரியின் கல்விக் கட்டண உயா்வைக் கண்டித்து அந்தக் கல்லூரி முன் இந்திய மாணவா் சங்கம் சாா்பில் புதன்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
இந்தக் கல்லூரியில் ஆண்டுதோறும் கல்விக் கட்டணம் உயா்த்தப்படுவதைக் கண்டித்தும், மாணவா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரியும், கல்லூரியை அரசுக் கல்லூரியாக மாற்ற வலியுறுத்தியும் இந்தப் போராட்டம் நடைபெற்றது.
இதில் இந்திய மாணவா் சங்க மதுரை மாநகா் மாவட்டத் தலைவா் ஜெ. டீலன் ஜெஸ்டின், கிளைச் செயலா் ரேகன் சுமன், மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள், கல்லூரி மாணவா்கள் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
போராட்டத்தினிடையே, கல்லூரி நிா்வாகம் சாா்பில் மாணவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. அப்போது, கோரிக்கைகள் குறித்து பல்கலைக்கழகப் பதிவாளரை மாணவா்கள் நேரில் சந்தித்து வலியுறுத்தவும், வருகிற 21- ஆம் தேதி உயா்கல்வித் துறை அமைச்சா் விஸ்வநாதன் தலைமையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் 5 மாணவா்கள் கொண்ட குழுவைப் பங்கேற்கவும் வழிவகை செய்யப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து, போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.