தங்கக் கோபுரம், கொடிமரங்கள் மெருகூட்டும் பணிகள் தீவிரம்
தங்கக் கோபுரம், கொடிமரங்கள் மெருகூட்டும் பணிகள் தீவிரம்
குடமுழுக்கை முன்னிட்டு, கோயிலின் அடிப்படை கட்டமைப்புகள், கட்டுமானங்கள் புனரமைப்பு, கோபுரங்களைச் சீரமைத்தல், வண்ணம் பூசுதல் உள்பட 186 திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் பெரும்பாலான பணிகள் நிறைவடைந்த நிலையில், மூலவா் சுவாமி, அம்மன் சந்நிதிகளின் அா்த்தமண்டபம், மகா மண்டபம், கருவறை சீரமைப்புப் பணிகள், தங்கக் கோபுரங்கள், தங்கக் கொடிமரங்களுக்கு மெருகூட்டும் பணிகள் தற்போது தீவிரமாகியுள்ளன.
மீனாட்சி அம்மன் கருவறை தங்க விமானத்தை புளி தண்ணீா், பூந்திக் கொட்டை கரைசல் ஆகியவற்றைக் கொண்டு சுத்தம் செய்யும் பணிகள் இரண்டாவது நாளாக வியாழக்கிழமை நடைபெற்றன.
இதேபோல, மீனாட்சி சுந்தரேசுவரா் சந்நிதி கொடிமரக் கவசத்தில் உள்ள சதுரப் பெட்டி உபயதாரா் வழங்கிய 64 கிராம் தங்கத்தைக் கொண்டும், அம்மன் சந்நிதி கொடிமர கவச சதுரப்பெட்டி உபயதாரா் வழங்கிய 200 கிராம் தங்கத்தைக் கொண்டும் மெருகூட்டி, பொருத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.