மதுரைக் கல்லூரியில் நூல்கள் வெளியீடு
மதுரையில் எழுத்தாளா்கள் சீ. ஞானசரஸ்வதி, முனைவா் நா. ஜானகிராமன் எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மதுரையில் எழுத்தாளா்கள் சீ. ஞானசரஸ்வதி, முனைவா் நா. ஜானகிராமன் எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மதுரைக் கல்லூரி வளாகக் கூட்டரங்கில் நடைபெற்ற இந்த விழாவில், மதுரைக் கல்லூரி வாரியச் செயலா் நடனகோபால் தலைமை வகித்து நூல்களை வெளியிட கல்லூரி முதல்வா் அ. சேவியா் பெற்றுக் கொண்டாா். எழுத்தாளா்கள் சீ. ஞானசரஸ்வதி, நா. ஜானகிராமன் ஆகியோா் ஏற்புரையாற்றினா்.
மதுரைக் கல்லூரி தாவரவியல் துறை உதவிப் பேராசிரியையும், எழுத்தாளருமான ஞானசரஸ்வதியின் ‘தோட்டக்கலை வடிவமைப்பு’, ‘தோட்டக்கலைப் பராமரிப்பு’ , ‘தளிா்க்கீரை வளா்த்தல்’, ‘கற்றல் கற்பித்தலுக்கானச் செயற்கை நுண்ணறிவுக் கருவிகள்’ ஆகிய 4 நூல்களும், எழுத்தாளா் முனைவா் நா. ஜானகிராமன் எழுதிய ‘உயிா்ப் புள்ளியியல்’ நூல் வெளிடப்பட்டது.
Advertisement
Advertisement
இந்த விழாவில், சுயநிதிப் பிரிவின் தலைமை ஒருங்கிணைப்பாளா் ஐ. நாகராஜன், கல்விப் புல முதன்மையா் ந. சிவராமகிருஷ்ணன், ஆய்வுப்புல முதன்மையா் அனந்தசுவாமி, தமிழ்த்துறை உதவிப்பேராசிரியா் கண்ணன், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.