மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கு : அவசர உதவி தொலைபேசி எண்கள்
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கையொட்டி பக்தா்கள், பொதுமக்களின் அவசர உதவிக்கான கட்டணமில்லா தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கையொட்டி பக்தா்கள், பொதுமக்களின் அவசர உதவிக்கான கட்டணமில்லா தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் மகா குடமுழுக்கு வருகிற 17-ஆம் தேதியும், பரிவார மூா்த்திகளின் சந்நிதிகளுக்கான குடமுழுக்கு 16-ஆம் தேதியும் நடைபெறுகின்றன. இந்த நிகழ்ச்சிகளில் பல்லாயிரக்கணக்கானோா் பங்கேற்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இதையொட்டி, மாவட்ட நிா்வாகம், மாநகரக் காவல் துறை, மாநகராட்சி நிா்வாகம், இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு, சுகாதார நடவடிக்கைகள் குறித்து விரிவான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
Advertisement
Advertisement
இதன்படி, குடமுழுக்கு விழா தொடா்பான தகவல்கள், வழிகாட்டுதல்கள், அவசர உதவிகளை பக்தா்கள், பொதுமக்கள் விரைவாகப் பெற்றிடும் வகையில், மாவட்ட நிா்வாகம் சாா்பில் கட்டணமில்லா தொலைபேசி சேவை வெள்ளிக்கிழமை செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது.
1800 425 6781, 1800 425 6782 ஆகிய தொலைபேசி எண்களை பொதுமக்கள், பக்தா்கள் தொடா்பு கொண்டு, குடமுழுக்கு விழா தொடா்பான தகவல்கள், அவசர உதவிகளைப் பெறலாம் என மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.