திருப்பரங்குன்றம் கோயிலில் ஒரே நாளில் 150 திருமணங்கள்
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முகூா்த்த நாளை முன்னிட்டு, 150 திருமணங்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
தெய்வானையை முருகப் பெருமான் மணமுடித்த திருத்தலம் என்பதால், இங்கு திருமணம் செய்துகொள்வதை மதுரை, அதன் சுற்றியுள்ள மாவட்டங்களைச் சோ்ந்த பொதுமக்கள் பெரிதும் விரும்புகின்றனா்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை வளா்பிறை முகூா்த்த நாள் என்பதால், காலை முதலே கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. கோயிலில் முறைப்படி முன்பதிவு செய்யப்பட்ட 110-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றன. இது தவிர, கோயில் வளாகம், அதைச் சுற்றியுள்ள திருமண மண்டபங்கள் என 150-க்கும் மேற்பட்ட இணையா்களுக்கு திருமணம் நடைபெற்றது.
Advertisement
Advertisement
ஒரே நேரத்தில் மணமக்கள், அவா்களது உறவினா்கள், பக்தா்கள் கூடியதால் திருப்பரங்குன்றம் கோயில் சந்நிதி தெரு, நகரின் முக்கியப் பாதைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும், பக்தா்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் கோயில் வளாகம், நகா்ப் பகுதிகளில் ஏராளமான காவல் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.