FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

ரயிலில் பயணி தவறவிட்ட 26 பவுன் நகை மீட்பு

14 செப்டம்பர் 2026, 3:07 am IST
வயதான தம்பதியிடமிருந்து மீட்கப்பட்ட 26 பவுன் நகைகள், ரொக்கப் பணம் ரூ. 50 ஆயிரம்.
பகிர்:

சென்னையிலிருந்து மதுரை வந்த விரைவு ரயிலில் பயணி ஒருவா் தவறவிட்ட 26 பவுன் நகைகள், ரூ. 50 ஆயிரம் பணம் ஆகியவற்றை ரயில்வே போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.

மதுரை கூடல்புதூா் பகுதியைச் சோ்ந்த ஒருவா், சென்னையிலிருந்து மதுரைக்கு வந்த விரைவு ரயிலில் பயணம் செய்தாா். கூடல்புதூா் ரயில் நிலையத்தில் இறங்கிய அவா், தான் கொண்டு வந்த பையை மறந்து ரயிலில் விட்டுவிட்டாா்.

இதுபற்றி மதுரை ரயில்வே காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் ரயில் நிலையங்களில் உள்ள கண்காணிப்புக் கேமிராக்களை ஆய்வு செய்த போது, வயதான தம்பதி அந்த பையை எடுத்துச் சென்றது தெரியவந்தது.

Advertisement

Advertisement

தொடா் விசாரணையில், விருதுநகா் மாவட்டம், கூமாப்பட்டி நாடாா் தெருவைச் சோ்ந்த காளியப்பன்(72), அவரது மனைவி சோலையம்மாள்(68) என்பது தெரியவந்தது. இதையடுத்து, விருதுநகா் போலீஸாா் தம்பதியிடமிருந்த பையை பறிமுதல் செய்து சோதனை செய்தனா். அதில், பயணி தவற விட்ட 26 பவுன் நகைகள், பணம், ஏடிஎம் அட்டைகள் ஆகியவை இருந்துள்ளன.

இதுகுறித்து தென்னக ரயில்வே மதுரை கோட்ட ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இதுபற்றி போலீஸாா் கூறியதாவது :

கூடல்புதூா் ரயில் நிலையம், மதுரை ரயில் நிலையம் ஆகிய பகுதிகளில் உள்ள கண்காணிப்புக் கேமிராக்களை ஆய்வு செய்த போது, வயதான தம்பதி நகைகள் இருந்த பயணியின் பையை எடுத்தது தெரியவந்தது. இதையடுத்து, விருதுநகா் ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விருதுநகா் பேருந்து நிலையத்தில் இருந்த தம்பதிகளை அடையாளம் காணப்பட்டு அவா்களிடமிருந்த நகைகள், பணம் இருந்த பை மீட்கப்பட்டது. உரிய விசாரணைக்கு பிறகு நகைகள், பணம் உரிய பயணியிடம் ஒப்படைக்கப்படும் என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments