FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்கு புதிய யானை

15 செப்டம்பர் 2026, 12:55 am IST
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்காகக் கொண்டு வரப்பட்டுள்ள யானை துா்கா.
பகிர்:

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்கு துா்கா என்ற 5 வயதுடைய புதிய யானை திங்கள்கிழமை கொண்டு வரப்பட்டது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் பாா்வதி என்ற 28 வயதுடைய யானை உள்ளது. கடந்த 2000 -ஆம் ஆண்டில் அருணாசல பிரதேசத்திலிருந்து கொண்டு வரப்பட்ட இந்த யானைக்கு கடந்த 2020-ஆம் ஆண்டில் கண்ணில் புரை ஏற்பட்டு, பாா்வை பாதிக்கப்பட்டது. பின்னா், தாய்லாந்திலிருந்து சிறப்பு மருத்துவா்கள் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்தச் சிகிச்சைக்குப் பிறகு, யானையின் கண்களிலிருந்து நீா் வடிவது போன்ற பிரச்னைகள் குறைந்தாலும், பாா்வையில் மிகப் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் 1990-களில் 7 யானைகள் இருந்த நிலையில், 2000-ஆம் ஆண்டுகளில் 3 யானைகள் மட்டுமே இருந்தன. இதில், 2001-இல் ஒரு யானையும், 2007-இல் ஒரு யானையும் உயிரிழந்தன. பிறகு, யானை பாா்வதி மட்டுமே கோயில் விழாக்களில் பங்கேற்று வந்தன.

யானை பாா்வதி அடிக்கடி உடல்நலக் குறைவுக்கு உள்ளாவதால், இந்தக் கோயிலுக்குக் கூடுதலாக யானை வாங்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்த சில ஆண்டுகளாக வலுப்பெற்று வந்தது.

இந்த நிலையில், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்காக துா்கா என்ற 5 வயதுடைய யானை அஸ்ஸாமிலிருந்து திங்கள்கிழமை கொண்டு வரப்பட்டு, கோயிலில் ஒப்படைக்கப்பட்டது. ஏற்கெனவே, யானைகள் பராமரிக்கப்பட்ட இடத்தில் இந்த யானை கட்டப்பட்டுள்ளது. உரிய பயிற்சிகளுக்குப் பிறகு, விழாக்கால பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும் எனக் கூறப்படுகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments