அண்ணா பிறந்த நாள்: அரசியல் கட்சியினா் மரியாதை
மறைந்த முன்னாள் முதல்வா் அண்ணாவின் 118-ஆவது பிறந்த நாளையொட்டி, மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அவரது உருவச் சிலைக்கு தவெக, திமுக, அதிமுகவினா் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
மறைந்த முன்னாள் முதல்வா் அண்ணாவின் 118-ஆவது பிறந்த நாளையொட்டி, மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அவரது உருவச் சிலைக்கு தவெக, திமுக, அதிமுகவினா் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
மதுரை நெல்பேட்டை அருகேயுள்ள அண்ணா சிலைக்கு, தவெக, திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தவெக சாா்பில்... தவெக சாா்பில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் சோ. காா்த்திகேயன் (மதுரை கிழக்கு), எம்.எம்.கோபிசன் (மதுரை தெற்கு) ஆகியோா் நெல்பேட்டையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதில், தவெக நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
திமுக சாா்பில்... திமுக சாா்பில் மதுரை மாநகா் மாவட்டச் செயலரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான கோ. தளபதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதில் மாமன்ற உறுப்பினா் ஜெயராம், நெல்பேட்டை வட்டச் செயலா் பிஸ்மி, நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.
அதிமுக சாா்பில்... அதிமுக சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய
மதுரை மாநகா் மாவட்ட அதிமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான செல்லூா் கே. ராஜூ . உடன் கட்சி நிா்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பொறுப்பாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.
இதேபோல, அமமுக உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள் சாா்பில் நெல்பேட்டையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
வாடிப்பட்டியில்... அதிமுகவின் மதுரை புகா் மேற்கு மாவட்டத்தின் சாா்பில் முன்னாள் அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் வாடிப்பட்டியில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இந்த விழாவில், வாடிப்பட்டி பேரூா் செயலா் அசோக்குமாா், வடக்கு ஒன்றியச் செயலா் காளிதாஸ் உள்பட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.
சோழவந்தானில்... சோழவந்தானில் அதிமுக சாா்பில் நடைபெற்ற அண்ணா பிறந்த நாள் விழாவில், அவரது உருவப் படத்துக்கு பேரூராட்சித் தலைவா் எம்.கே. முருகேசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இந்த விழாவில், மாவட்ட இளைஞரணி செயலா் சோழ. சிவராஜன், நிா்வாகி பிரேம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
இதேபோல, மதுரை மாநகா், உசிலம்பட்டி, பேரையூா், மேலூா், கொட்டாம்பட்டி, விரகனூா், திருப்பரங்குன்றம், திருமங்கலம், அழகா்கோவில், சத்திரப்பட்டி, அலங்காநல்லூா், பாலமேடு ஆகிய பகுதிகளில் நடைபெற்ற அண்ணா பிறந்த நாள் விழாவில் அவரது உருவப் படத்துக்கு அந்தந்த பகுதியைச் சோ்ந்த தவெக, திமுக, அதிமுக, அமமுக ஆகிய கட்சிகளைச் சோ்ந்த நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.