மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றி 36 பழமையான கட்டடங்களுக்கு மாநகராட்சி நோட்டீஸ்!
கோயில் சுற்றுவட்டாரத்தில் ஆபத்தான நிலையில் உள்ள 36 பழமையான கட்டடங்களுக்கு நோட்டீஸ் பற்றி..
மதுரை மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள 36 பழைமையான கட்டடங்களுக்கு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள சித்திரை, ஆவணி மூல வீதிகளில் உள்ள ஆபத்தான வகையில் உள்ள பழமையான 36 கட்டடங்கள் பொது மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் இடிந்துவிழும் நிலையில் உள்ளது. கண்டறியப்பட்டு கட்டடத்தை 7 நாள்களுக்குள் தாங்கள் உரிய அனுமதி பெற்று இடித்து அப்புறப்படுத்த வேண்டும் எனக் கூறி நோட்டீஸ் ஒட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், கட்டடத்தினை உரிய அனுமதி பெற்று இடித்து அப்புறப்படுத்துமாறு அறிவிக்கப்படுகிறது. தவறும்பட்சத்தில் ஏற்படக்கூடிய அசம்பாவிதங்களுக்கு தாங்களே முழு பொறுப்பேற்க வேண்டும். தாங்கள் அவ்விதம் செய்யத் தவறினால் மேற்படி பழுதடைந்த கட்டடம் மதுரை மாநகராட்சியால் இடிக்கப்பட்டு, அதற்குண்டான செலவுத் தொகை தங்களிடமிருந்து வசூல் செய்யப்படும் எனவும் மாநகராட்சி சார்பில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Advertisement
Advertisement
மேலும், 265 கட்டங்களின் உறுதித்தன்மை குறித்தும், பொதுமக்களைக் கட்டடத்தின் மீது அனுமதிக்கக்கூடாது எனக் கூறியும் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.