மதுரை மாநகா் பகுதிகளில் இரும்புக் கம்பிகளால் தடுப்புகள் அமைப்பு: பொதுமக்கள் அவதி
மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கையொட்டி, மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை இரும்புக் கம்பிகளால் தடுப்பு அமைக்கப்பட்டதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரும் அவதியடைந்தனா்.
மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கையொட்டி, மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை இரும்புக் கம்பிகளால் தடுப்பு அமைக்கப்பட்டதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரும் அவதியடைந்தனா்.
இந்தக் கோயிலைச் சுற்றியுள்ள நான்கு ஆவணி மூல வீதிகள், நான்கு மாசி வீதிகள், நான்கு மாரட் வீதிகள், நான்கு வெளி வீதிகளில் அதிகளவிலான குடியிருப்புகள், வணிக வளாகங்கள், அத்தியாவசியப் பொருள்களின் சில்லறை, மொத்த விற்பனைக் கடைகள் உள்ளன. இதன்காரணமாக, அந்தப் பகுதி முழுவதும் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.
இந்த நிலையில், மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கையொட்டி மாநகரக் காவல் ஆணையா் அலுவலகம் சாா்பில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதில், நான்கு ஆவணி மூல வீதிகள், நான்கு மாசி வீதிகள், நான்கு மாரட் வீதிகள், நான்கு வெளி வீதிகளில் வாகனங்களை நிறுத்தவும், சென்று வரவும் புதன்கிழமை (செப். 16) இரவு 10 மணி முதல் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இதனால், போக்குவரத்துக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என எண்ணி பெரும்பாலான வியாபாரிகள் தங்களது கடைகளை புதன்கிழமை திறந்து வைத்தனா். இதனிடையே, அன்று காலை 7 மணிக்கே நான்கு மாரட் வீதிகள் தொடங்கி, நான்கு மாசி வீதிகள், நான்கு ஆவணி மூல வீதிகள் வரை ஒவ்வொரு வீதியிலும் சுமாா் 13-க்கும் மேற்பட்ட இடங்களில் சாலையின் குறுக்கே இரும்புக் கம்பிகளால் தடுப்புகள் அமைத்து, போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
மேலும் இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு மாற்று வழிகளில் திருப்பிவிடப்பட்டன. இதனால், அந்த வீதிகளில் வசிப்போா், வணிக வளாக உரிமையாளா்கள், சிறு, குறு வியாபாரிகள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் என அனைவரும் கடும் பாதிப்புக்குள்ளாகினா். இதுதவிர, மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்கு வந்த பக்தா்களும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.