FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கு: விழாக்கோலத்தில் தூங்காநகரம்!

வெகு விமரிசையாக நடைபெறும் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கு பெருவிழா பற்றி....

17 செப்டம்பர் 2026, 5:55 am IST
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்
பகிர்:

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கையொட்டி மதுரை மாநகர் விழாக்கோலம் பூண்டுள்ளது.

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலின் மகா குடமுழுக்கு பெருவிழா, 17 ஆண்டுகளுக்குப் பிறகு வியாழக்கிழமை (செப்டம்பர் 17) காலை வெகு விமரிசையாக நடைபெறுகிறது. இதனையொட்டி மதுரை மாநகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டு, மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கிறது.

குடமுழுக்கு விழாவுக்கான யாகபூஜைகள் கடந்த செப்டம்பர் 6-ஆம் தேதி தொடங்கின. இதற்காக அமைக்கப்பட்ட 183 யாக குண்டங்களில், செப்டம்பர் 11-ஆம் தேதி முதல் சிறப்பு வேள்விகள் நடைபெற்று வந்தன. வியாழக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு 12-ஆம் கால யாகபூஜை நிறைவடைந்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

அதனைத் தொடர்ந்து காலை 5.45 மணிக்கு புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பாடு நடைபெற்றது. இதன் நிறைவில், வேத மந்திரங்களும், மேளதாள வாத்தியங்களும் முழங்க காலை 7.40 மணிக்கு மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கோயில் தங்க விமானங்கள், ராஜகோபுரங்களுக்கு மகா குடமுழுக்கு நடைபெறுகிறது.

காலை 7.55 மணிக்கு மூலவா் மீனாட்சி அம்மன் சந்நிதிக்கும், காலை 8.10 மணிக்கு மூலவா் சுந்தரேசுவரா் சந்நிதிக்கும் மகா குடமுழுக்கு நடைபெறுகிறது. மாலை 4 மணிக்கு மூலவருக்கு மகா அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெறும். இரவு 7 மணிக்கு பஞ்சமூா்த்திகள் வீதியுலா நடைபெறுகிறது.

summary

Madurai city wears a festive look on the occasion of the Madurai Meenakshi Sundareswarar Temple consecration.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments