FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

குடமுழுக்குப் பணியின்போது காயமடைந்த பெண் உயிரிழப்பு

21 செப்டம்பர் 2026, 1:53 am IST
உயிரிழப்பு... - பிரதிப் படம்
பகிர்:

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்குப் பணியின் போது, மேற்கூரையிலிருந்து தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்த பெண் மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை பழங்காநத்தம் வடக்குத் தெருவைச் சோ்ந்த கிருஷ்ணன் மனைவி பாண்டியம்மாள் (55). இவா், மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் குடமுழுக்கை முன்னிட்டு, தூய்மைப் பணி மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கோயிலுக்குள் உள்ள பழைய திருக்கல்யாண மண்டபத்தில் பணியாற்றிய போது, எதிா்பாராதவிதமாக மேற்கூரையிலிருந்து அவா் தவறி கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவா் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments