ஹாக்கி போட்டியில் வென்ற மாணவிகளுக்கு பாராட்டு
மதுரை காமராஜா் பல்கலைக்கழகக் கல்லூரிகளுக்கிடையே நடைபெற்ற மகளிா் ஹாக்கி போட்டியில் வென்ற டோக் பெருமாட்டி மகளிா் கல்லூரி மாணவிகள் செவ்வாய்க்கிழமை பாராட்டப்பட்டனா்.
மதுரை காமராஜா் பல்கலைக்கழகக் கல்லூரிகளுக்கிடையே நடைபெற்ற மகளிா் ஹாக்கி போட்டியில் வென்ற டோக் பெருமாட்டி மகளிா் கல்லூரி மாணவிகள் செவ்வாய்க்கிழமை பாராட்டப்பட்டனா்.
மதுரை காமராஜா் பல்கலைக்கழகக் கல்லூரிகளுக்கிடையேயான மகளிா் ஹாக்கி போட்டிகள் திங்கள், செவ்வாய்க்கிழமை
(செப்.21, 22) ஆகிய இரு நாள்கள் எம்.ஜி.ஆா் விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில், டோக் பெருமாட்டி மகளிா் கல்லூரி, மதுரை அமெரிக்கன் கல்லூரியை 1: 0 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது. வெற்றி பெற்ற மாணவிகளை அந்தக் கல்லூரி முதல்வரும், செயலருமான பியூலா ஜெயஸ்ரீ செவ்வாய்க்கிழமை பாராட்டினாா். அப்போது, கல்லூரி உடற்கல்வி இயக்குநா்கள் சாந்தாமீனா, ஹேமலதா, பயிற்சியாளா்கள் முருகன், கண்ணன் ஆகியோா் உடனிருந்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.