FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

ஸ்ரீரங்கம் கோயில் நில முறைகேடு: முன் பிணை மனு மீதான விசாரணை நாளை ஒத்திவைப்பு

ஸ்ரீரங்கம் கோயில் நில முறைகேடு விவகாரத்தில் திமுக நிா்வாகி முன் பிணை கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு (செப். 25) ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

24 செப்டம்பர் 2026, 12:31 am IST
உத்தரவு - கோப்புப் படம்
பகிர்:

ஸ்ரீரங்கம் கோயில் நில முறைகேடு விவகாரத்தில் திமுக நிா்வாகி முன் பிணை கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு (செப். 25) ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

ஸ்ரீரங்கம் கோயில் நில முறைகேடு வழக்கில் தனக்கு முன் பிணை வழங்க வேண்டும் என ஸ்ரீரங்கம் பகுதி திமுக செயலா் ராம்குமாா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்தாா். இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி முரளி சங்கா் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் தலைமைக் குற்றவியல் வழக்குரைஞா் முன்னிலையாக கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து, இந்த வழக்கில் தொடா்புடைய ராம்குமாருக்கு முன் பிணை வழங்கக் கூடாது. மேலும், இடையீட்டு மனு தாக்கல் செய்ய கோயில் இணை ஆணையருக்கு அனுமதி வழங்க வேண்டும் என கோயில் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

Advertisement

Advertisement

பிறகு, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

இந்த விவகாரத்தில் கோயில் தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்படுகிறது. வழக்கு விசாரணை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments