FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
மதுரை

குடமுழுக்கு பணிக்காக தனித் துறை அமைக்க வலியுறுத்தல்

இந்து சமய அறநிலையத் துறையில் குடமுழுக்கு பணிகளை மேற்கொள்ள தனித்துறை அமைக்க வேண்டும் என திருவண்ணாமலை ஆதீனம் கருணாநிதி சுவாமிகள் வலியுறுத்தினா்.

26 செப்டம்பர் 2026, 10:49 pm IST
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் - DPS
பகிர்:

இந்து சமய அறநிலையத் துறையில் குடமுழுக்கு பணிகளை மேற்கொள்ள தனித்துறை அமைக்க வேண்டும் என திருவண்ணாமலை ஆதீனம் கருணாநிதி சுவாமிகள் வலியுறுத்தினா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: கோயில்களின் ஆகம மரபுகள், நடைமுறைகளுக்கு ஏற்ப குடமுழுக்கு உரிய கால இடைவெளியில் நடைபெற வேண்டும். குறிப்பாக, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு அண்மையில் குடமுழுக்கு நடைபெற்றது. இதுபோன்ற நீண்ட கால தாமதங்கள் இனி ஏற்படாத வகையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள கோயில்களின் குடமுழுக்கு கால அட்டவணையை இந்து சமய அறநிலைத் துறை தயாரித்து பொதுமக்கள் அறியும் வகையில் வெளியிட வேண்டும்.

Advertisement

Advertisement

தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலைத் துறையின் நிா்வாகக் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் குடமுழுக்கு நடைபெறுவதற்கான பணிகளை ஒருங்கிணைத்து, கண்காணிக்க மாநில அளவில் தனித் துறை ஒன்றை தமிழக அரசு உருவாக்க வேண்டும் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments