FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மஸ்தூர் பணியாளர்களுக்கு  4 மாதங்களாக சம்பளம் நிலுவை

கமுதி ஒன்றியத்தில் 4 மாதங்களாக மஸ்தூர் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்காததால் பணியாளர்கள் வேலைக்கு செல்ல தயங்குகின்றனர்.

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

கமுதி ஒன்றியத்தில் 4 மாதங்களாக மஸ்தூர் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்காததால் பணியாளர்கள் வேலைக்கு செல்ல தயங்குகின்றனர்.
கமுதி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 53 ஊராட்சிகளில் துப்புறவு, காய்ச்சல் ஒழிப்பு உள்பட சுகாதார பணிகளில் ஈடுபடும் பணியாளர்கள் நிரந்தர பணியிடத்தில் 30 பேர், ஒப்பந்த அடிப்படையில் 22 பேர் என 52 பேர் மஸ்தூர் பணியில் உள்ளனர். ஊராட்சிகளுக்கு உள்பட்ட கிராமங்களில் துப்புறவு, காய்ச்சல் பாதித்த கிராமங்களில் சுகாதார பணிகள் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் மஸ்தூர் பணியாளர்களுக்கு வாரம் ஒரு முறை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளால் கூட்டம் நடத்தப்பட்டு, பணிகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இருந்தபோதிலும் 4 மாதங்களாக மஸ்தார் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை. ஊழியர்கள் பணிக்குச் செல்ல தயங்குவதால் துப்புரவு பணி பாதிக்கும் நிலை  ஏற்பட்டு உள்ளது. 
இதுகுறித்து மஸ்தூர் பணியாளர்கள் கூறுகையில், "" ஊராட்சிகளில் பணியாற்றும் மற்ற பணியாளர்களுக்கு மாதந்தோறும் சம்பளம் வழங்கப்படும் நிலையில், மஸ்தூர் பணியாளர்களுக்கு மட்டும் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தால், சம்பளம் வழங்கப்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையீடு செய்தால், நிதி ஒதுக்கீடு இல்லை என்ற பதிலே வருகிறது. 
மாவட்ட நிர்வாகம் தலையிட்டு கமுதி ஒன்றியத்தில் பணியாற்றும் மஸ்தூர் பணியாளர்களுக்கு சம்பள பாக்கியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments