ராமேசுவரம் கோயிலில் மூதாட்டியிடம் 5 பவுன் நகை திருட்டு
ராமேசுவரம் கோயிலில் செவ்வாய்க்கிழமை புனித தீர்த்தங்களில் நீராடியபோது மூதாட்டியிடம் 5 பவுன் நகை திருடப்பட்டுள்ளது.
ராமேசுவரம் கோயிலில் செவ்வாய்க்கிழமை புனித தீர்த்தங்களில் நீராடியபோது மூதாட்டியிடம் 5 பவுன் நகை திருடப்பட்டுள்ளது.
சென்னை வில்லிவாக்கம் ரஜினி நகர் பகுதியை சேர்ந்த ராமன் மனைவி வசந்தா (73). உறவினர்களுடன் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வந்திருந்தார். அங்கு உள்ள புனித தீர்த்தங்களில் நீராடிக்கொண்டிருந்த போது கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை மர்ம நபர் திருடிச் சென்றுவிட்டார்.
இது குறித்து வசந்தா அளித்த புகாரின் பேரில் கோயில் காவல் நிலையப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.