104 -ஐ தொடர்பு கொண்டால் இலவச மருத்துவ ஆலோசனை
இலவச மருத்துவ ஆலோசனைக்கு பொதுமக்கள் 104 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என 108 ஆம்புலன்ஸ் சேவை நிர்வாக அதிகாரி தமிழ்செல்வன் அறிவித்துள்ளார்.
இலவச மருத்துவ ஆலோசனைக்கு பொதுமக்கள் 104 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என 108 ஆம்புலன்ஸ் சேவை நிர்வாக அதிகாரி தமிழ்செல்வன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து புதன்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:
தமிழகத்தில் அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவை கடந்த 2008 முதல் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் 3042 பேர் பயனடைந்துள்ளனர். இதில் 1433 கர்பிணிகளும், சாலை விபத்தில் சிக்கிய 393 பேரும், இதர அவசரத்திற்காக 1216 பேரும் 108 சேவையை தொடர்பு கொண்டு பயனடைந்துள்ளனர்.
இதே போல் 108 ஆம்புலன்ஸ் சேவை நிர்வாகத்தால் இலவச மருத்துவ சேவைக்கு 104 என்ற எண் கடந்த 2013 ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டு, மருத்துவ உதவி, மருத்துவம் சார்ந்த தகவல், மருத்துவ ஆலோசனை மற்றும் புகார்களுக்காக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் சேவையை போலவே 104 சேவையை தொடர்பு கொண்டும் பயனடைய வேண்டும் என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.