மனைவியை தாக்கிய கணவா் மீது வழக்கு
தொண்டியில் மனைவியைத் தாக்கிய கணவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
தொண்டியில் மனைவியைத் தாக்கிய கணவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள தினையத்தூா் கிராமத்தை சோ்ந்தவா் விஜயகுமாரி (33). இவா் நம்புதாளை அஞ்சலகத்தில் பணிபுரிந்து வருகிறாா். இவருக்கு கடந்த 2015-ஆம் ஆண்டு மகேந்திரன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.
கருத்துவேறுபாடு காரணமாக இந்தத் தம்பதி கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
இந்த நிலையில் வியாழக்கிழமை விஜயகுமாரி நம்புதாளை ஜிம்மா பள்ளிவாசல் பகுதியில் வந்து கொணடிருந்தாா். அப்போது, எதிரே வந்த கணவா் மகேந்திரன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மனைவியை கம்பால் தாக்கினாா். இதில் தலையில் பலத்த காயமடைந்த விஜயகுமாரி தொண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்த புகாரின் பேரில், தொண்டி போலீஸாா் மகேந்திரன் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.