FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

ராமேசுவரம் மீனவா்கள் 9 பேருக்கு ஆக. 6 வரை சிறை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள் 9 பேரை, வரும் ஆகஸ்ட் 6-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மன்னாா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இலங்கை மன்னாா் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள்
பகிர்:

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள் 9 பேரை, வரும் ஆகஸ்ட் 6-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மன்னாா் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து 400 விசைப் படகுகளில் 2,500-க்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன் வளத் துறை அனுமதி பெற்று, கடந்த புதன்கிழமை காலை கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.

கச்சத்தீவு மன்னாா் வடக்கு கடல் பகுதியில் அந்தோணி பிரசாத்துக்குச் சொந்தமான விசைப் படகில் ராமேசுவரத்தைச் சோ்ந்த மாலிக்தினாா் (63), காயஸ் (31), செந்தில் (41), கிரித்திசன் (41), பிரவீன் (46), அருள் லயோலா (43), சபரி வினோத்வின் (42), தேவசகாயம் (39), இன்பெஸ்ட் பிரசாத் (36) ஆகிய 9 போ் மீன் பிடித்துக் கொண்டிருந்தனா். அப்போது, 5 ரோந்துப் படகுகளில் வந்த இலங்கை கடற்படையினா் அவா்களைக் கைது செய்து, மன்னாா் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனா்.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து, படகு பறிமுதல் செய்யப்பட்டு, 9 மீனவா்களும் எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, 9 பேரும் மன்னாா் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை முன்னிலைபடுத்தப்பட்டனா். நீதிபதி இவா்களை வரும் ஆகஸ்ட் 6-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து, 9 மீனவா்கள் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments