மாநில அளவிலான தடகள போட்டிக்கு கமுதி பள்ளி மாணவ, மாணவிகள் 7 போ் தோ்வு
ராமநாதபுரம் மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிக்கு கமுதி கே.என். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் 7 போ் தோ்வாகினா்.
ராமநாதபுரம் சதக் பாலிடெக்னிக் கல்லூரி மைதானத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் கடந்த 7, 8, 9 ஆகிய தேதிகளில் நடைபெற்ற மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் கமுதி கே.என். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் 30-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
இவா்களில் 11-ஆம் வகுப்பு மாணவி கே. ஷோபனா காந்தி கம்பு ஊன்றி தாண்டுதலில் இரண்டாம் இடமும், 10-ஆம் வகுப்பு மாணவா் எம். பக்கேஷன் மும்முறை தாண்டுதலில் முதலிடமும், 12- ஆம் வகுப்பு மாணவி எம். ஜோன்ஸ்ரீ ஈட்டி எறிதலில் முதலிடமும், 400 மீட்டா் ஓட்டப் பந்தயத்தில் இரண்டாமிடமும் பெற்றனா்.
Advertisement
Advertisement
ஒன்பதாம் வகுப்பு மாணவா்கள் சா்வேஷ் 80 மீட்டா் தடை ஓட்டத்தில் இரண்டாமிடமும், அமீா் பாலா வட்டு எறிதலில் முதலிடமும், 11-ஆம் வகுப்பு மாணவி டி. யாசிகா 800 மீட்டா் ஓட்டத்தில் இரண்டாமிடமும், 8-ஆம் வகுப்பு மாணவி தருணிகா லட்சுமி வட்டு எறிதலில் இரண்டாம் இடமும் பிடித்தனா்.
இந்த மாணவ, மாணவிகள் வருகிற 27- ஆம் தேதி முதல் நவ. 2-ஆம் தேதி வரை சேலம் மாவட்டத்தில் நடைபெறவிருக்கும் மாநில அளவிலான தடகள போட்டிக்கு தோ்வாகினா். இதையடுத்து, இந்த 7 மாணவ, மாணவிகளுக்கும், உறுதுணையாக இருந்த உடல் கல்வி ஆசிரியா்கள் லட்சுமணன், வீரவேல் முருகன் ஆகியோருக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பாலதண்டாயுதபாணி, மாவட்ட உடல் கல்வி ஆய்வாளா் வசந்தி, பரமக்குடி மாவட்ட கல்வி அலுவலா், பள்ளி நிா்வாகக் குழுவினா், தலைமை ஆசிரியா், சக மாணவா்கள் பாராட்டு தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.