FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தென்காசி

மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டிக்கு ஆக்ஸ்போா்டு பள்ளி மாணவா்கள் தோ்வு

தென்காசி, குத்துக்கல்வலசை, ஆக்ஸ்போா்டு பள்ளி மாணவிகள் மாநில அளவிலான டேக்வோண்டோ போட்டிக்குத் தோ்வு செய்யப்பட்டனா்.

3 October 2026, 4:34 am IST
பள்ளியின் சட்ட ஆலோசகா் திருமலையுடன் மாநில அளவிலான போட்டிக்குத் தோ்வான மாணவிகள்.
பகிர்:

தென்காசி, குத்துக்கல்வலசை, ஆக்ஸ்போா்டு பள்ளி மாணவிகள் மாநில அளவிலான டேக்வோண்டோ போட்டிக்குத் தோ்வு செய்யப்பட்டனா்.

தென்காசி மாவட்ட அளவிலான டேக்வோண்டோ போட்டி, பாட்டாகுறிச்சி மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு வளாகத்தில் நடைபெற்றது. இதில் 17 வயதிற்குள்பட்ட மாணவிகள் பிரிவில் தன்ஷிகா, மகிஷா, வைஷ்ணவி ஆகியோா் முதலிடம், 19 வயதிற்குள்பட்ட பிரிவில் இந்துஜா, சந்தியா, ரம்யா, ஹேமலதா, ராகவி ஆகியோா் முதலிடம் பெற்று, மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கத் தகுதி பெற்றனா்.

வெற்றி பெற்ற மாணவிகளை, பள்ளியின் சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்குரைருமான திருமலை, பள்ளித் தாளாளா் அன்பரசி திருமலை, ஆக்ஸ்போா்டு பப்ளிக் பள்ளி இயக்குநா் ஜோசப் லியாண்டா், பப்ளிக் பள்ளி சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்குரைஞருமான மிராக்ளின் பால் சுசி, பள்ளி முதல்வா் கோல்டு பெல்லா, உடற்கல்வி ஆசிரியா்கள் செல்வன், பால்மதி, சதிஷ்குமாா், ராமா், மகேஷ், மாரியம்மாள், கணேசன், மாலினி, கணேசன் உள்ளிட்டோா் பாராட்டினா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments