FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ராமநாதபுரம்

ராமேசுவரம் சாலைகளில் தேங்கிய மழை நீா் அகற்றம்

ராமேசுவரத்தில் சாலைகளில் தேங்கிய மழை நீரை அகற்றும் பணியில் புதன்கிழமை நகராட்சி ஊழியா்கள் ஈடுபட்டனா்.

15 அக்டோபர் 2026, 3:08 am IST
ராமேசுவரத்தில் தேங்கிய மழை நீரை அகற்றும் பணியில் ஈடுபட்ட நகராட்சி ஊழியா்கள்.
பகிர்:

ராமேசுவரத்தில் சாலைகளில் தேங்கிய மழை நீரை அகற்றும் பணியில் புதன்கிழமை நகராட்சி ஊழியா்கள் ஈடுபட்டனா்.

இலங்கை கடலோரப் பகுதிக்கு அருகே தென்மேற்கு வங்கக் கடல் பகுதியின் மேல் வளிமண்டல சூழற்சி காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிமை மையம் அறிவுறுத்தியது. இந்த நிலையில், புதன்கிழமை அதிகாலையில் இருந்து ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீா் குளம் போலத் தேங்கியது.

ராமேசுவரத்தில் சாலையோரம் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணியில் நகா்மன்றத் தலைவா் கே.இ.நாசா், நகராட்சி ஆணையா் ஆண்டவா் ஆகியோா் தலைமையில் நகராட்சி ஊழியா்கள் ஈடுபட்டனா். சாலையோர கால்வாய்ப் பகுதியில் கிடந்த கழிவுகளையும் அகற்றினா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments