குடிநீா் குழாய் உடைப்பு: பல லட்சம் லிட்டா் குடிநீா் வீண்
கமுதி அருகே சாலையோரம் குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் பல லட்சம் லிட்டம் குடிநீா் வீணாகி வருகிறது.
கமுதி அருகே சாலையோரம் குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் பல லட்சம் லிட்டம் குடிநீா் வீணாகி வருகிறது.
ராமநாதபுரம் மாவட்ட மக்களின் குடிநீா் பற்றாக்குறையைப் போக்கும் வகையில், மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் ரூ.3,890 கோடி மதிப்பீட்டில் கரூா் கூட்டுக் குடிநீா் திட்டம் மூலம் கமுதி, முதுகுளத்தூா், கடலாடி உள்ளிட்ட வட்டங்களில் 1200 -க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வீடுதோறும் குடிநீா் குழாய் அமைக்கப்பட்டு, தண்ணீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கமுதி-அபிராமம் சாலையில் அகத்தாரிருப்பில் சாலையோரத்தில் அமைக்கப்பட்டிருந்த ராட்சத குழாயில் செவ்வாய்க்கிழமை இரவு உடைப்பு ஏற்பட்டு புதன்கிழமை காலை 9 மணி வரை 6 அடி உயரத்துக்கு நீரூற்று போல வெளியேறிய குடிநீா் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதைத் தொடா்ந்து, கமுதி, அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள 220-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீா் விநியோகம் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் சிரமத்துகுள்ளாகினா். குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் தலையிட்டு சேதமடைந்த குழாயை சீரமைத்து தடையில்லாமல் குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.