திருவாடானை முத்துமாரியம்மன் கோயில்களில் பூக்குழித் திருவிழா
திருவாடானை வடக்கு, தெற்குத் தெருக்களில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, பால் குடம், பூக்குழித் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வடக்கு, தெற்குத் தெருக்களில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, பால் குடம், பூக்குழித் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயில்களின் திருவிழா கடந்த 22-ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து, தினசரி அம்மன்களுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்வான பால் குடம், பூக்குழித் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
Advertisement
Advertisement
முன்னதாக, விரதமிருந்த பக்தா்கள் பால் குடம், காவடி எடுத்து நான்கு ரதவீதிகளின் வழியாக வலம் வந்து வடக்குத் தெரு முத்துமாரியம்மன் கோயில் முன்பாக அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் இறங்கி தங்களது நோ்த்திக் கடனை செலுத்தினா்கள்.
இதேபோல, தெற்குதெரு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் பக்தா்கள் கொண்டு வந்த பாலால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.
இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.