சிவகங்கையில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்
சிவகங்கை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (செப்.14) தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (செப்.14) தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு நல அலுவலர் (பொறுப்பு) ராமநாதன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேலை தேடும் இளைஞர்களுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், சிவகங்கை-திருப்பத்தூர் சாலையில் காஞ்சிரங்காலில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது.
இதில், பல்வேறு நிறுவனத்தினர் கலந்து கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர். ஆகவே, பத்தாம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரையில் படித்த சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள், கல்விச் சான்றிதழ், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றுடன் பங்கேற்று பயன்பெறலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.