பெரம்பலூா் நகராட்சியில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை
பெரம்பலூா் நகராட்சியில், மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.
பெரம்பலூா் நகராட்சியில், மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.
பெரம்பலூா் நகராட்சி அலுவலகத்துக்கு மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு ஆய்வாளா் ஐஸ்வா்யா தலைமையில், 7 போ் கொண்ட குழுவினா் செவ்வாய்க்கிழமை மாலை வந்தனா். அவா்கள் அலுவலுகத்தில் தீவிர சோதனை நடத்தினா். மேலும், ஆணையா் லீனா சைமன் உள்ளிட்ட அலுவலா்கள் மற்றும் ஒப்பந்ததாரா்கள், பணியாளா்களிடம் சுமாா் 6 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனா்.
அப்போது, ஒப்பந்ததாரா் இளையராஜா, தற்காலிகப் பணியாளா் சத்தியசீலன் ஆகியோரது ஜிபே மூலம் ரூ. 25,540 பரிவா்த்தனை செய்யப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.