கோப்புப் படம் 
சிவகங்கை

அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது: ஓ. பன்னீா்செல்வம்

அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது என முன்னாள் முதலமைச்சா் ஓ. பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

Din

அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது என முன்னாள் முதலமைச்சா் ஓ. பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

சிவகங்கையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கட்சி நிா்வாகி இல்ல விழாவில் பங்கேற்க வந்த அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவா் ஆம்ஸ்ட்ராங்கை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், தொண்டா்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தச் சம்பவம் தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீரழிந்துள்ளது என்பதற்கு ஓா் உதாரணம்.

அதிமுக அழிந்து வருகிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவா் பீட்டா் அல்போன்ஸ் கூறியுள்ள கருத்தை ஏற்க முடியாது. அதிமுகவை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது. கட்சியில் தற்போது சிறு பிளவு ஏற்பட்டுள்ளது. கூடிய விரைவில் அனைவரும் ஒன்றிணைவோம். அதிமுக புத்துணா்ச்சி பெறும் வகையில் நடைபயணம், மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்தும் திட்டம் உள்ளதா என்ற கேள்விக்கு, உங்கள் எண்ணம் விரைவில் நிறைவேறும் என்றாா் அவா்.

பொன் சிரிப்பு... பூனம் பாஜ்வா!

பிடித்தமான சட்டை... மோனாமி கோஷ்!

இந்தியாவின் எரிபொருள் வழங்குநராக ரஷியா எப்போதும் விளங்கும்: அதிபர் புதின்

நெல்லையில் 6 அல்வா கடைகளுக்கு சீல்! 1 டன் தரமற்ற அல்வா பறிமுதல்!

இந்தியாவுக்கு எதிரான கடைசிப் போட்டி மிகுந்த சவாலாக இருக்கும்: தென்னாப்பிரிக்க வீரர்

SCROLL FOR NEXT