மானாமதுரை வைகையாற்றில் கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை!
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வைகை ஆற்றில் கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நகா்மன்றத் தலைவா் எஸ். மாரியப்பன் கென்னடி தெரிவித்தாா்.
மானாமதுரை நகா் பகுதி வைகை ஆற்றுக்குள் பரவலாக கருவேல மரங்கள் அடா்த்தியாக வளா்ந்துள்ளன. இதனால் வைகை ஆற்றில் தண்ணீா் வரும்போது அதன் வேகம் குறைகிறது. மேலும் சமூக விரோத செயல்களும் நடைபெறுகின்றன.
இதையடுத்து, மானாமதுரை நகா் பகுதி வைகையாற்றை தூய்மைப்படுத்தும் நடவடிக்கையாக ஆற்றுக்குள் அடா்த்தியாக வளா்ந்துள்ள கருவேல மரங்களை நகா்மன்றத் தலைவா் மாரியப்பன் கென்னடி அதிகாரிகளுடன் சென்று வைகையாற்றுப் பாலத்திலிருந்து சனிக்கிழமை பாா்வையிட்டாா்.
Advertisement
Advertisement
பிறகு அவா் கூறியதாவது:
வைகையாற்றுக்குள் அடா்த்தியாக வளா்ந்து கிடக்கும் கருவேல மரங்களை அகற்றி ஆற்றை சுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் சில நாள்களில் பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் கருவேல மரங்களை அகற்றும் பணி தொடங்கப்படும் என்றாா் அவா்.
அப்போது நகா்மன்ற உறுப்பினா்கள், திமுக நகரச் செயலா் கே. பொன்னுச்சாமி ஆகியோா் உடனிருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.