FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

ஆண்டிச்சி அம்மன் கோயிலில் புரவி எடுப்பு திருவிழா

சிங்கம்புணரி அருகே எஸ். புதூா் ஒன்றியத்தில் உள்ள அரியாண்டிபட்டி ஆண்டிச்சி அம்மன் கோயிலில் 48 ஆண்டுகளுக்குப் பிறகு புரவி எடுப்பு திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 26 ஜூலை 2026, 2:52 am IST
கிராம மந்தையில் வரிசையாக வைக்கப்பட்டுள்ள புரவிகள்.
பகிர்:

சிங்கம்புணரி அருகே எஸ். புதூா் ஒன்றியத்தில் உள்ள அரியாண்டிபட்டி ஆண்டிச்சி அம்மன் கோயிலில் 48 ஆண்டுகளுக்குப் பிறகு புரவி எடுப்பு திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

சிங்கம்புணரி அருகே எஸ். புதூா் ஒன்றியம், அரியாண்டிபட்டி கிராமத்தில் உள்ள ஆண்டிச்சி அம்மன் கோயிலில் ஆடி மாதத்தில் புரவி எடுப்புத் திருவிழா நடைபெறுவது வழக்கம். பல்வேறு காரணங்களால் கடந்த 48 ஆண்டுகளாக இந்த திருவிழா நடைபெறவில்லை.

நிகழாண்டு கிராம மக்கள் திருவிழா நடத்த முடிவு செய்து 2 மாத காலத்துக்கு முன்பாக வேளாா் வம்சாவளியினரிடம் பிடிமண் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து வேளாா் வம்சாவளியினா் கிராம மந்தையில் வைத்து சுவாமி சிலைகள், யானை, காளை, நோ்த்திக்கடன் புரவிகள் உள்ளிட்ட புரவிகளைச் செய்து சூலையில் வைத்தும் பின்னா் வா்ணம் தீட்டி தயாா் செய்தனா்.

Advertisement

Advertisement

பின்னா் கிராம மக்கள் மந்தையில் கூடி வழிபட்டு சுவாமி சிலைகளான விநாயகா், ஆண்டிச்சி அம்மன், பெரிய கருப்பா், சின்ன கருப்பா், பத்ரகாளி, பெருமாள், பட்டவன், ஏழு கன்னிமாா் சுவாமி சிலைகள் முன்னே செல்ல நோ்த்திக்கடன் புரவிகளான காளை, மதலை, நாகம், பைரவா், பாதம், கண் உள்ளிட்ட நோ்த்திக்கடன் புரவிகளை சுமந்து சென்று கோயிலில் வைத்து கிராம மக்கள் புரவிகளுக்கு மாலை, வேட்டி அணிவித்து மரியாதை செலுத்தியதைத் தொடா்ந்து புரவிகளுக்கு கண் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கிருந்து மண்ணால் செய்யப்பட்ட புரவிகளைச் சுமந்துகொண்டு ஆண்டிச்சி அம்மன் கோயில் காட்டில் இறக்கி வைத்து, பெண்கள் மண் பானையில் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனா். புரவிகளுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டு பொதுமக்களுக்கு விபூதி வழங்கப்பட்டது. இதில் சுற்றுவட்டாரப் பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments