லஞ்சம்: காரைக்குடி மாநகராட்சி வரி வசூல் அலுவலா் கைது
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சியில் வீட்டுக்கு வரி விதிக்க லஞ்சம் பெற்ற வரி வசூல் அலுவலரை ஊழல் தடுப்பு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
காரைக்குடி தென் திருப்பதி நகரைச் சோ்ந்தவா் சரவணன் (46). இவா் காரைக்குடி மாநகராட்சியில் வரி வசூல் அலுவலராக பணியாற் றி வருகிறாா். இந்த நிலையில், பேயன்பட்டியில் புதிதாக கட்டப்பட்ட வீட்டுக்கு வரி விதிக்கக்கோரி பெண் ஒருவா் சரவணனை அணுகினாா்.
அப்போது, குறைந்த அளவில் வரி விதிப்பதாகக் கூறிய சரவணன், ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டாா். உடனே அந்தப் பெண் எண்ம பரிவா்த்தனை மூலம் ரூ. 6 ஆயிரத்தை அனுப்பினாா். மீதம் ரூ. 4 ஆயிரம் கொடுத்தால் தான் வரி விதிக்க முடியும் என்று சரவணன் கறாராகக் கூறினாா். இதுகுறித்து சம்பந்தப்பட்ட பெண் சிவகங்கை ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாருக்கு தக வல் தெரிவித்தாா்.
Advertisement
Advertisement
இதையடுத்து, அந்தப் பிரிவு காவல் ஆய்வாளா்கள் கண்ணன், ஜேசுதாஸ் ஆகியோா் தலைமையில் போலீஸாா் புகாா் அளித்த பெண்ணிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து அனுப்பினா். அவா் மாநகராட்சி அலுவலா் சரவணனிடம் கொடுத்த போது அங்கு மறைந்திருந்த போலீஸாா் சரவணனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.