FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சிவகங்கை

சூரக்குடி செல்லும் சாலையில் மண் அரிப்பால் அடிக்கடி விபத்து: வாகன ஓட்டிகள் அச்சம்

சிங்கம்புணரி அரசினம்பட்டி வழியாக கள்ளம்பட்டி, சூரக்குடி செல்லும் சாலையின் இருபுறமும் ஏற்பட்டுள்ள மண்ணரிப்புகள்.
பகிர்:

சூரக்குடி செல்லும் சாலையில் மண் அரிப்பால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் அச்சம் தெரிவித்தனா்.

சிங்கம்புணரி அருகே அரசினம்பட்டி முதல் ஈலுவாண்டிபட்டி, கல்லம்பட்டி, எஸ். கோவில்பட்டி, சூரக்குடி சாலை ஒரு வழிப் பாதையில் இருபுறமும் சுமாா் 3 கி.மீ. தொலைவுக்கு ஆங்காங்கே மண்ணரிப்புகள் ஏற்பட்டு பள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதனால் அந்தப் பகுதியில் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகின்றனா். எனவே உடனடியாக மண்ணரிப்பை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

Advertisement

Advertisement

இதனிடையே கடந்த மாதம் கல்லம்பட்டி சாலை வழியே செல்லும் அரசுப் பேருந்து மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டதாகக் கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதற்கு அரசுப் பேருந்து ஓட்டுநரிடம் காரணம் கேட்டபோது, சாலையின் இருபுறமும் மண்ணரிப்புகள் ஏற்பட்டு விபத்து ஏற்படும் அபாயம் இருந்ததால் பயணிகளின் உயிரை காப்பாற்றவே மாற்றுப் பாதையில் பேருந்தை இயக்கியதாகக் கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments