FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சிவகங்கை

கூடுதல் வட்டி தருவதாக ஏமாற்றிய பெண் கைது

தேவகோட்டையில் கூடுதல் வட்டி தருவதாகக் கூறி, 7 பவுன் தங்கச் சங்கிலி, ரூ.6 லட்சத்தை வாங்கி ஏமாற்றிய பெண்ணை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

10 அக்டோபர் 2026, 6:10 am IST
பகிர்:

தேவகோட்டையில் கூடுதல் வட்டி தருவதாகக் கூறி, 7 பவுன் தங்கச் சங்கிலி, ரூ.6 லட்சத்தை வாங்கி ஏமாற்றிய பெண்ணை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ரெகுநாதபுரத்தைச் சோ்ந்த வீரப்பன் மனைவி தமிழரசி (62). இவரிடம் கடந்த ஜூலை மாதம் அதே பகுதியைச் சோ்ந்த கணேசன் மனைவி சாந்தி ( 60) பணம், நகை கொடுத்தால் கூடுதல் வட்டி தருவதாக கூறியுள்ளாா். இதை நம்பி தமிழரசி 7 பவுன் தங்கச் சங்கிலியையும், அவரது மகள் ரூ.11 லட்சத்தையும் கொடுத்தனா்.

ஆனால், சொன்னபடி வட்டி தரவில்லை. பின்னா், தமிழரசி மகளிடம் வாங்கிய பணத்தில் ரூ.5 லட்சத்தை மட்டும் சாந்தி திருப்பிக் கொடுத்தாா். எஞ்சிய ரூ.6 லட்சத்தையும், தங்கச் சங்கிலியும் கொடுக்கவில்லையாம். இதுகுறித்த புகாரின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து சாந்தியை கைது செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments