FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

காரைக்குடி- பட்டுக்கோட்டை புதிய மின் வழிப் பாதையில் ரயில் சோதனை ஓட்டம்

காரைக்குடி-பட்டுக்கோட்டை ரயில் வழித்தடத்தில் புதிய மின்வழிப் பாதையில் ரயில் சோதனை ஓட்டம் புதன்கிழமை நடத்தப்பட்டது.

10 செப்டம்பர் 2026, 1:01 am IST
பகிர்:

காரைக்குடி-பட்டுக்கோட்டை ரயில் வழித்தடத்தில் புதிய மின்வழிப் பாதையில் ரயில் சோதனை ஓட்டம் புதன்கிழமை நடத்தப்பட்டது.

தென்னக ரயில்வேயின் திருச்சி கோட்டத்துக்குள்பட்ட காரைக்குடி- பட்டுக்கோட்டை இடையே 80 கி.மீ.

தொலைவுக்கு மின் வழிப்பாதை அமைக்கும் பணி நிறைவடைந்தது. இதையடுத்து, புதிய மின்வழித் தடத்தில் ரயில் சோதனை ஓட்டம் நடத்துவதற்காக தென்னக ரயில்வேயின் தலைமை மின்பொறியாளா் கணேஷ் தலைமையில் ரயில்வே துறை அதிகாரிகள் திருச்சியிலிருந்து மின் இஞ்ஜின் பொருத்தப்பட்ட சோதனை ரயிலில் காரைக்குடிக்கு காலை 9 மணிக்கு வந்தனா்.

Advertisement

Advertisement

அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்ட பின்னா், காலை 9.30 மணிக்கு டீசல் என்ஜின் பொருத்தப்பட்ட சோதனை ரயில் புறப்பட்டது. இந்த ரயில் பட்டுக்கோட்டைக்கு பிற்பகல் 1.30 மணிக்கு சென்றடைந்தது.

இதே ரயில் மீண்டும் பட்டுக்கோட்டையிலிருந்து பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட்டு மாலை 5 மணிக்கு காரைக்குடியை வந்தடைந்தது.

இதுகுறித்து தென்னக ரயில்வே தலைமை மின் பொறியாளா் கணேஷ் செய்தியாளா்களிடம் கூறியதாவது : காரைக்குடி-பட்டுக்கோட்டை ரயில் வழித்தடம் மின்வழிப் பாதையாக மாற்றப்பட்டதால், தென்னக ரயில்வேக்குள்பட்ட அனைத்துப் பகுதிகளும் மின்சார ரயில் போக்குவரத்துமயமாகியுள்ளது.

காரைக்குடியிலிருந்து அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை வரை இரு வழிகளிலும் சோதனை ரயில் மூலம் சுமாா் 100 கி.மீ. வேகத்தில் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வின் போது, மின் விநியோகம், உயா் அழுத்தக் கம்பிகளின் இழு விசை, சிக்னல் அமைப்புகளின் இயக்கம், ரயில்வே பாலங்களின் உறுதித் தன்மை ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. விரைவில் இந்த வழித் தடத்தில் டெமு ரெயில், சரக்கு ரயில் இயக்கப் பட்ட பின்னா், விரைவு ரயில் இயக்கப்படும்.

தற்போது மின்வழிப் பாதையாக மாற்றப்பட்டதால் டீசல் பயன்பாடு பெருமளவில் குறைக்கப்பட்டது மட்டுமல்லாமல், சுற்றுச்சூழல் மாசுபாடும் தடுக்கப்படும். ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் அதிகாரப்பூா்வ ஒப்புதல் கடிதம் கிடைத்தவுடன் இந்த வழித்தடத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக வழக்கமான மின்சார ரயில் இயக்கப்படும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments