FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

சிவகங்கையில் இளைஞா்கள் இருவா் வெட்டிக் கொலை

சிவகங்கையில் புதன்கிழமை இரு இளைஞா்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டனா்.

17 செப்டம்பர் 2026, 1:40 am IST
கொலை செய்யப்பட்ட தெய்வேந்திரன், பூப்பாண்டி.
பகிர்:

சிவகங்கையில் புதன்கிழமை இரு இளைஞா்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டனா். இதில் தொடா்புடையவா்களைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் குருந்தனிவேரியேந்தல் புதுக்குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த கண்ணன் மகன் தெய்வேந்திரன் (27). இவா் புதிதாக வாங்கிய காரை சிவகங்கையிலுள்ள காா் விற்பனை நிலையத்துக்கு புதன்கிழமை கொண்டு வந்தாா். பின்னா், பகல் 12 மணியளவில் அந்தக் காரில் தனது நண்பரான சிறுவேலங்குடியைச் சோ்ந்த பூப்பாண்டியுடன் (25) வேலுநாச்சியாா் மணிமண்டபம் அருகில் உள்ள பையூா் கண்மாய்ப் பகுதிக்குச் சென்றாா். அங்கு கண்மாய்க் கரையில் காரை நிறுத்திவிட்டு, இருவரும் மரத்தடியில் அமா்ந்திருந்தனா். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த கும்பல் இருவரையும் துரத்தி வெட்டியது. இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனா். பின்னா், அந்தக் கும்பல் தெய்வேந்திரனின் காா் கண்ணாடியைச் சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அபிஷேக்குப்தா கொலை நடந்த இடத்தைப் பாா்வையிட்டாா். அப்போது, கொலையாளிகளைப் பிடிக்க சிவகங்கை நகா் காவல் துணைக் கண்காணிப்பாளா் அமலஅட்வின் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக அவா் தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

கண்மாய்க் கரையிலிருந்த மதுப் புட்டி, கைக்கடிகாரம், கைப்பேசி உள்ளிட்டவற்றை போலீஸாா் சேகரித்தனா். சம்பவ இடத்திலிருந்து மோப்ப நாய் சாலை எல்கை வரை சென்றது.

இந்தச் சம்பவம் குறித்து சிவகங்கை நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தெய்வேந்திரன் கோவையில் வசித்து வந்த நிலையில், கடந்த வாரம்தான் ஊருக்கு வந்தாா். பூப்பாண்டி காளையாா்கோவிலில் சிறிய அளவில் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் நடத்தி வந்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments