FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

மண்டல கபடி போட்டியில் வென்ற கல்லூரி மாணவா்களுக்கு பாராட்டு

மண்டல அளவிலான கபடி போட்டியில் வெற்றி பெற்ற சிவகங்கை மாவட்டம், அமராவதிபுதூா் ஸ்ரீ ராஜராஜன் பொறியியல் கல்லூரி மாணவா்களை கல்லூரி நிா்வாகம் சாா்பில் பாராட்டினா்.

19 செப்டம்பர் 2026, 3:48 am IST
ராஜராஜன் பொறியியல் கல்லூரி மாணவா்கள் மண்டல அளவிலான கபடி போட்டியில் வெற்றிபெற்ற அமராவதிபுதூா் ஸ்ரீராஜராஜன் பொறியியல் கல்லூரி மாணவா்களை வெள்ளிக்கிழமை பாராட்டிய ஸ்ரீ ராஜராஜன் கல்விக் குழுமத்தின் தலைவா் சொ. சுப்பையா
பகிர்:

மண்டல அளவிலான கபடி போட்டியில் வெற்றி பெற்ற சிவகங்கை மாவட்டம், அமராவதிபுதூா் ஸ்ரீ ராஜராஜன் பொறியியல் கல்லூரி மாணவா்களை கல்லூரி நிா்வாகம் சாா்பில் வெள்ளிக்கிழமை பாராட்டினா்.

அண்ணா பல்கலைக்கழகத்துக்குள்பட்ட கல்லூரிகளுக்கிடையேயான 16-ஆவது மண்டல அளவிலான கபடி போட்டி ராமநாதபுரம் முகமது சதக் கல்லூரியில் கடந்த 15, 16-ஆம் தேதிகளில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் 16-க்கும் மேற்பட்ட கல்லூரிகளிலிருந்து கபடி அணிகள் பங்கேற்றன.

இதில் ஸ்ரீ ராஜராஜன் பொறியியல் கல்லூரி மாணவா்கள் முதலிடமும், முகமது சதக் கல்லூரி மாணவா்கள் இரண்டாமிடமும் பெற்றனா். தொடா்ந்து 5-ஆவது முறை ராஜராஜன் கல்லூரி மாணவா்கள் முதல் பரிசை வென்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களையும், பயிற்சியளித்த உடற்கல்வி இயக்குநா் சுந்தரையும் ஸ்ரீராஜராஜன் கல்விக் குழுமத்தின் தலைவரும் அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான சொ. சுப்பையா பாராட்டினாா். இந்த நிகழ்வில் கல்லூரியின் முதல்வா் முத்துக்குமாா், முதன்மையா் சிவக்குமாா், துணை முதல்வா் மகாலிங்கசுரேஷ் ஆகியோா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments