FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கார் மோதி கூலித்தொழிலாளி உள்பட  2 பேர் பலத்த காயம்

போடியில் சாலையில் நடந்து சென்ற கூலித் தொழிலாளி உள்பட 2 பேர் கார் மோதி புதன்கிழமை காயமடைந்தனர். 

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

போடியில் சாலையில் நடந்து சென்ற கூலித் தொழிலாளி உள்பட 2 பேர் கார் மோதி புதன்கிழமை காயமடைந்தனர். 
 போடி துரைராஜபுரம் காலனியைச் சேர்ந்தவர் தொந்திராஜ் (62). இவர் போடி ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரி அருகே ஒரு தோட்டத்தில் தங்கி வேலை 
செய்து வருகிறார்.  இவர் போடி-மூணாறு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கேரள மாநிலத்தில் இருந்து வந்த கார், தொந்திராஜ் மீது மோதியது. 
இதில் பலத்த காயமடைந்த தொந்திராஜ், தேனி அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 
மேலும் காரை ஓட்டி வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஆரோன் (48) என்பவரும் காயமடைந்தார். விபத்து குறித்து போடி நகர் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு 
செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments