தேனியில் "நீட்' தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் இந்திய மாணவர் சங்கம் சார்பில் புதன்கிழமை, நீட் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும்
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் இந்திய மாணவர் சங்கம் சார்பில் புதன்கிழமை, நீட் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் பிரேம்குமார் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் டி.நாகராஜ் முன்னிலை வகித்தார். இதில், மருத்துவக் கல்விக்கான நீட் தேர்வு முறைய ரத்து செய்ய வேண்டும். அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும்.
அரசு விடுதிகளில் மாணவர்களுக்கு உணவு மானியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரி நேரத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும்.
மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டையை உடனடியாக வழங்க வேண்டும். தேனி நகராட்சி பழைய பேருந்து நிலையம் மற்றும் தேவதானப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி அருகே திறக்கப்பட்டுள்ள அரசு மதுக்கடையை இடம் மாற்றம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.