போடி அருகே குடிநீர் தொட்டி சேதம்: சீரமைக்கக் கோரிக்கை
போடி அருகே சேதமடைந்த குடிநீர் தொட்டியை சீர் செய்து தர வேண்டும் என விவேகானந்தா இளைஞர் மன்றத்தினர் வியாழக்கிழமை கோரிக்கை விடுத்துள்ளனர்.
போடி அருகே சேதமடைந்த குடிநீர் தொட்டியை சீர் செய்து தர வேண்டும் என விவேகானந்தா இளைஞர் மன்றத்தினர் வியாழக்கிழமை கோரிக்கை விடுத்துள்ளனர்.
போடி அருகே போ.மீனாட்சிபுரம் பேருராட்சியில் உள்ள கிராமம் பொட்டல்களம். இங்கு 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் குடிநீருக்காக 3 முதல் 5 கி.மீ. தூரம் நடந்து சென்று மீனாட்சிபுரம் அல்லது மீ.விலக்கு பகுதியில் தண்ணீர் எடுத்து வரவேண்டிய நிலை இருந்தது. இதனால் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஆழ்குழாய் கிணறு அமைத்து குடிநீர் தொட்டி அமைத்து தரப்பட்டது. இந்நிலையில் இந்த குடிநீர் தொட்டியில், பொருத்தப்பட்டுள்ள குழாய் இணையும் பகுதி உடைந்து சேதமடைந்தது.
இதுகுறித்து இக்கிராம மக்கள் பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.
இதுகுறித்து விவேகானந்தா இளைஞர் மன்றத்தினர் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பியுள்ளனர். அதில் உடனே குடிநீர்த் தொட்டி குழாயை சீர் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.