FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

போடி பள்ளியில் தூய்மை பாரதம் விழிப்புணர்வு கண்காட்சி

போடி பிச்சாண்டி நடுநிலைப்பள்ளியில் தூய்மை பாரதம் விழிப்புணர்வு கண்காட்சி செவ்வாய்க் கிழமைநடைபெற்றது.

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

போடி பிச்சாண்டி நடுநிலைப்பள்ளியில் தூய்மை பாரதம் விழிப்புணர்வு கண்காட்சி செவ்வாய்க் கிழமைநடைபெற்றது.
மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் போடி பிச்சாண்டி நடுநிலைப் பள்ளியில் செப்டம்பர் 1 முதல் தூய்மை பாரதம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர் ரா.ஜெயக்குமார் தலைமையில் வட்டாரக் கல்வி அலுவலர் எஸ்.பிரபாகர் பேரணியை தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சுற்றுப்புறத் தூய்மை, மரம் வளர்ப்பு, நெகிழி ஒழிப்பு உள்ளிட்டவற்றை வலியுறுத்தி முழக்கமிட்டும், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தியபடியும் சென்றனர்.
தொடர்ந்து பள்ளியில் தூய்மை பாரதம் விழிப்புணர்வு கண்காட்சி  நடைபெற்றது.  கண்காட்சியில் தண்ணீர் மாசுபாட்டால் ஏற்படும் பாதிப்புகள், திறந்த வெளி கழிப்பிடங்களால் ஏற்படும் சுகாதாரக்கேடு, மரங்களை வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகளை விளக்கும் வகையில் மாதிரிகள் அமைக்கப்பட்டிருந்தன.  கண்காட்சியை வட்டாரக் கல்வி அலுவலர் எஸ்.பிரபாகர், அனைவருக்கும் கல்வி இயக்க பொறுப்பு மேற்பார்வையாளர் எம்.நிர்மலா, பள்ளி மாணவர்கள், பெற்றோர், பொதுமக்கள் பார்வையிட்டனர். ஏற்பாடுகளை தலைமையாசிரியர் ரா.ஜெயக்குமார் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments