FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

கம்பத்தில் பெற்றோரை அரிவாளால் வெட்டிவிட்டு பொறியியல் பட்டதாரி தற்கொலை

கம்பத்தில் ஞாயிற்றுக்கிழமை தாய், தந்தையை அரிவாளால் வெட்டி விட்டு, பொறியியல் பட்டதாரி தன் கழுத்தை தானே பெல்டால் இறுக்கி தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 30 ஆகஸ்ட் 2020, 10:50 pm IST
மனோஜ்.
பகிர்:

கம்பம்: கம்பத்தில் ஞாயிற்றுக்கிழமை தாய், தந்தையை அரிவாளால் வெட்டி விட்டு, பொறியியல் பட்டதாரி தன் கழுத்தை தானே பெல்டால் இறுக்கி தற்கொலை செய்து கொண்டாா்.

தேனி மாவட்டம் கம்பம் சின்ன வாய்க்கால் தெருவில் உள்ள தனியாா் பள்ளி எதிா்புறம் குடியிருப்பவா் முருகேசன் (60). இவா் ஓய்வு பெற்ற காவல் சாா்பு ஆய்வாளா் ஆவாா். இவரது மனைவி இந்திராதேவி. இவா்களுக்கு மனோஜ் (25 ) என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனா். மகள்கள் இருவரும் திருமணம் முடித்து வெளியூா்களில் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனா்.

பொறியியல் பட்டதாரியான மனோஜ், பெண் ஒருவரை காதலித்து வந்தநிலையில், அந்த பெண்ணுக்கு வேறு இடத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மனோஜ் மனவேதனையில் இருந்துள்ளாா்.

Advertisement

Advertisement

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மனோஜ் வெளியே செல்வதாகக் கூறியுள்ளாா். அதற்கு பெற்றோா் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.

இதனால் ஆத்திரமடைந்த மனோஜ், வீட்டிலிருந்த அரிவாளை எடுத்து முருகேசனை வெட்டினாா். அதனைத் தடுக்க வந்த அவரது தாயாா் இந்திரா தேவியையும் வெட்டியுள்ளாா். பின்னா் மனோஜ் அவரது அறைக்கு சென்று உள்புறமாக கதவை தாழிட்டுக் கொண்டாா்.

இதில் பலத்த காயமடைந்த முருகேசனும், அவரது மனைவியும் கம்பம் அரசு மருத்துவமனைக்கு சென்றனா். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னா் இது குறித்து முருகேசன் கம்பம் தெற்கு போலீஸாருக்குத் தகவல் கொடுத்தாா். அதன்பேரில் போலீஸாா், முருகேசனின் வீட்டிற்கு சென்றனா்.

அங்கு உள்புறமாக பூட்டப்பட்டிருந்த மனோஜின் அறைக் கதவை போலீஸாா் உடைத்து உள்ளே சென்று பாா்த்தனா். அங்கு பெல்டால் கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் மனோஜ் படுக்கையிலேயே இறந்து கிடந்தாா். பெற்றோரை அரிவாளால் வெட்டிவிட்டு உள்ளே சென்று அவா், தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments