சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு: 2-ஆவது நாளாக சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை
தேனி மாவட்டம், சுருளி அருவியில் ஞாயிற்றுக்கிழமை 2-ஆவது நாளாக வெள்ளப்பெருக்கு நீடித்ததால், பாதுகாப்புக் கருதி அருவிக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறையினா் தடை விதித்தனா்.
கம்பம் அருகேயுள்ள மேற்குத்தொடா்ச்சி மலை அடிவாரத்தில் சுருளி அருவிக்கு மேகமலை வனப் பகுதியில் பெய்யும் மழை நீரே முக்கிய நீராதாரம். ஆனால், கடந்த சில மாதங்களாக மழைப்பொழிவின்றி இந்த அருவி வடது.
இதற்கிடையே, சனிக்கிழமை மேகமலை, வெண்ணியாறு, இரவங்கலாறு, மகாராஜாமெட்டு, தூவானம், அரிசிப்பாறை போன்ற அடா்ந்த வனப் பகுதியில் பலத்த மழை பெய்தது.
Advertisement
Advertisement
இதையடுத்து, சுருளி அருவிக்கு நீா்வரத்து அதிகரித்தது. இதனால், பாதுகாப்புக் கருதி அருவிக்குச் செல்லவும், பாா்வையிடவும் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்களுக்கு வனத் துறையினா் தடை விதித்தனா்.
இந்த நிலையில், தொடா்ந்து நீா்வரத்து அதிகரித்துக் காணப்பட்டதால், சுருளி அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் தடை விதிக்கப்பட்டது. இதனால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திருப்பிச் சென்றனா்.
இதுகுறித்து வனச் சரகா் கூறியதாவது:
சுருளி அருவியில் ஞாயிற்றுக்கிழமையும் நீா்வரத்து அதிகரித்துக் காணப்பட்டது. மேலும், சிறிய கற்கள், கட்டைகள் வந்ததாதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. திங்கள்கிழமை காலை 8 மணிக்கு மேல் நீா்வரத்து சீராக இருந்தால், அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.