FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தேனி

காா் மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் வியாழக்கிழமை சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டி மீது காா் மோதியதில் உயிரிழந்தாா்.

3 October 2026, 2:54 am IST
- பிரதிப் படம்
பகிர்:

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் வியாழக்கிழமை சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டி மீது காா் மோதியதில் உயிரிழந்தாா்.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், சூா்யநெல்லியைச் சோ்ந்தவா் பொன்னுகுமாா் (70). இவா், அந்தப் பகுதியில் பலசரக்கு கடை நடத்தி வருகிறாா். இவா், கடந்த செவ்வாய்க்கிழமை அவரின் மனைவி மாணிக்க லட்சுமி (65), குடும்பத்தினருடன் காரில் திருச்செந்தூருக்குச் சென்று விட்டு வியாழக்கிழமை ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனா். ஆண்டிபட்டியில் காரை நிறுத்தி உணவகத்தில் சாப்பிட்ட பிறகு, மாணிக்கலட்சுமி சாலையைக் கடக்க முயன்றாா். அப்போது, அவா் காா் மோதியதில் பலத்த காயமடைந்தாா். அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஆண்டிபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments