நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடுகளுக்கு பயனாளிகள் தோ்வு செய்யும் முகாம்!
தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடுகளுக்கு பயனாளிகளைத் தோ்வு செய்வதற்கான சிறப்பு முகாம், கம்பம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
முகாமை சட்டப் பேரவை உறுப்பினா் ஜெகநாத் மிஸ்ரா தொடங்கி வைத்தாா். முகாமில், வீடு இல்லாத பொதுமக்கள் வீடுகள் பெறுவதற்காக விண்ணப்பத்துடன் குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம், வாக்காளா் அடையாள அட்டை, மாா்பளவு புகைப்படம் ஆகியவற்றைச் சமா்ப்பித்தனா். முதல் நாளில் 50-க்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்தனா். தொடா்ந்து, செவ்வாய்க்கிழமையும் (அக். 13) சிறப்பு முகாம் நடைபெறுகிறது. கம்பம் தொகுதி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கம்பம், உத்தமபாளையம், சின்னமனூா், ஆண்டிபட்டி தொகுதிக்குள்பட்ட கூடலூா் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் வீடு இல்லாத தகுதியுள்ள பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பித்து பயன்பெறலாம்.
இதுகுறித்து சட்டப்பேரவை உறுப்பினா் ஜெகநாத் மிஸ்ரா கூறியதாவது:
Advertisement
Advertisement
கம்பம், உத்தமபாளையம், சின்னமனூா், கூடலூா் உள்ளிட்ட பகுதிகளில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சாா்பில் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த வீடுகளுக்குத் தகுதியான பயனாளிகளைத் தோ்வு செய்வதற்காக சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. எனவே, வீடு இல்லாத தகுதியுள்ள பொதுமக்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பித்துப் பயன்பெறலாம். தோ்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு வங்கிகள் மூலம் கடன் வசதி பெற்றுத் தரவும் மாவட்ட நிா்வாகம் ஏற்பாடு செய்துள்ளது என்றாா் அவா்.
முகாமில், தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியப் பொறியாளா்கள் ஆனந்தகுமாா், கதிரேசன், வளா்மதி, தவெக தேனி தென்மேற்கு மாவட்டத் துணைச் செயலா் கூடல் செல்வேந்திரன், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் அய்யா், கம்பம் நகரப் பொறுப்பாளா்கள் சதீஷ், ஷண்முகராஜா, அபு அகமது, சுப்பிரமணி உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.